Advertisment

மொரட்டு சிங்கிளா நீங்கள்...உங்களுக்கு 50% தள்ளுபடி...நம்ம தமிழ்நாட்டில தான்!

இன்றைய இளைஞர்களை 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என்று பிரித்து அவர்களை பற்றி மீம்ஸ் மற்றும் கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக செய்திகள் சமீப காலமாக பரவி கொண்டிருக்கிறது. அதே போல் இளைஞர்கள் மத்தியில் நான் முரட்டு சிங்கள்,நான் கமிட்டெட் என்றும் பரவி வருகிறது. இந்த நிலையில் முரட்டு சிங்கள் இளைஞர்களுக்காவே ஒரு உணவு விடுதியில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். அதாவது, காதல் செட் ஆகாதுன்னு சொல்லும் மொரட்டு சிங்கிள்களுக்காகவே மயிலாடுதுறையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

Advertisment

hotel

அந்த உணவகத்தில் இளைஞர்களுக்காவே ஒரு பகுதியை ஒதுக்கி ஒருவர் மட்டும் உட்காரும் வகையில் ஷேர் மற்றும் டேபிள் போடப்பட்டுள்ளது. தனியாக துணைக்கு யாரும் இல்லாமல் வரும் இளைஞர்கள் அந்த ஆபர் மற்றும் ஷேர், டேபிள் பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இன்றைய காலத்து இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தக் காலத்து விளையாட்டுகளை சுவற்றில் வரைந்து வைத்துள்ளனர். இதனால் பழைய விளையாட்டுகளையும் இந்த காலத்து இளைஞர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.

Advertisment
hotel love offer singles feeling Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe