Advertisment

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் சென்னை ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவில் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சென்னை மேயர் பிரியா, சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.