கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உயிரிழந்த குரங்கிற்கு கிராமமக்கள் இறுதி மரியாதை செய்தனர்.

Advertisment

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன்பேட்டை கிராமம். இக்கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக குரங்கு ஒன்று கிராமமக்களுடன் பழகி வந்தது. அந்த குரங்கிற்கு பாலா என்றும் பெயர் வைத்த கிராமமக்கள் அதனுடன் அடிக்கடி செல்பி எடுத்தும் மகிழ்ந்து வந்தனர். மேலும் அந்த குரங்கிற்கு கிராமக்கள் பல்வேறு வகையான உணவுகளை கொடுத்து வந்தனர். இதனால் அந்த குராங்கு அக்கிராமத்திலேயே சுற்றி அப்பகுதி மக்களுடன் பழகி வந்தது.

Advertisment

INCIDENT

சில நாட்களுக்கு முன்பு அந்தகுரங்கு அப்பகுதியில் செல்லும் மின்கம்பியில் தவி சென்றபோது மின்சாரம் தாக்கியது. இதில் குரங்கின் கை,கால்கள் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனையோடுத்து கிராமமக்கள் காயம்பட்ட குரங்கை காப்பாற்றி முதலுதவி அளித்து பாதுகாத்து வந்தனர்.

இந்தநிலையில் அந்தக் குரங்கு நேற்று முன்தினம் எதிர்பாராமல் உயிரிழந்தது. இதனால் அக்கிராமமக்கள் தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்ந்தனர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் அந்த உயிரிழந்த குரங்கின் உடலுக்கு சகல வாசனை திரவியங்களும் தெளித்தனர். மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து கிராமத்தின் சாலையோரம் உள்ள ஒரு இடத்தில் புதைத்தனர்.

Advertisment

INCIDENT

அந்த உயிரிழந்த குரங்கின் இறுதி மரியாதையின்போது வானவேடிக்கை வெடித்து தங்களின் துக்கத்தை அனுசரித்தனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், அந்த குரங்கிற்கு நாங்கள் பாலா என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். இது ஆரம்பத்தில் சின்ன, சின்ன தொல்லைகள் தந்தாலும் போகப்போக எங்களுக்கு நண்பனாகவே மாறி இந்த கிராமம் முழுக்க சுற்றிவந்தது. எதிர்பாராமல் அது இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. அதை புதைத்த இடத்தில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்துள்ளோம் என்று சோகத்துடன் தெரிவித்தனர்.