'Monkey pox laboratory at King Hospital'- Minister M. Subramanian interview!

Advertisment

சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் தற்போது வரை குரங்கம்மைபாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கம்மைக்கான அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும், குரங்கம்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம்.

குரங்கம்மையை கண்டறியும் ஆய்வகத்தை சென்னையில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கிண்டி கிங் மருத்துவமனையில் குரங்கம்மை நோய் பரிசோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கு குரங்கம்மைபரிசோதனை செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.