Advertisment

குரங்கணி தீ விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

jayasri

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 17 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் மதுரை, தேனி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Advertisment

இந்நிலையில் தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ (32) என்பவர் கடந்த 12ம் தேதி் தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டார். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்தது. 60 சதவீத தீக்காயத்துடன் இக்கட்டான நிலையில் உள்ள அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை ஜெய்ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

accident death fire kurankani Monkey
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe