Published on 17/03/2021 | Edited on 17/03/2021

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன. அதேபோல் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆரத்தி தட்டில் பணம் தந்த நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171 E-இன் கீழ் நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.