/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/323_6.jpg)
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கிநடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப்பேசினர்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவரிடம் 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி தெற்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளர் உச்சிமாகாளி பங்கேற்றார். அவரிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)