விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோழிப்பண்ணை பேருந்து நிலையத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் சோதனை நடந்து கொண்டிருந்தது.
அப்போது செஞ்சி மார்க்கத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த கோவிந்தராஜன் என்பவரின் காரில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்தார். பின்பு விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர்.
தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாற்கு நகை வாங்க சென்றதாகவும், ஆரணியில் உள்ள உறவினர்கள் வீட்டில் பத்திரிக்கை வைத்துவிட்டு வருவதாகவும் பணம் கொண்டு வந்த கோவிந்தராஜன் விசாரணையில் கூறியுள்ளார்.