Skip to main content

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கி பணம் கொள்ளை!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

ddd

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் 52 வயது வாசு. இவரது மகன் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறார். அவருக்கு 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வாசு மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

தண்ணீர் குடிப்பதற்காக வாசு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது, அறையின் உள்ளே மறைந்து இருந்த கொள்ளையன் திடீரென்று, வாசுவை தடியால் தாக்கியுள்ளான். அப்போது வாசு திருடனைப் பிடித்துக் கொண்டு, 'திருடன்', 'திருடன்' என்று சத்தம் போட்டுள்ளார். இவர்கள் சத்தத்தைக் கேட்ட வாசுவின் இரண்டாவது மகன் சந்திரகுமார் திருடனைப் பிடிக்க ஓடி வந்துள்ளார். அந்த நேரம் காவலுக்கு வெளியே நின்றிருந்த கொள்ளையர்கள், 4 பேர் தந்தை மகன் ஆகிய இருவரையும் உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். அதற்குள் வீட்டின் பின்பக்கம் வழியாகக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அதன்பிறகு உடைக்கப்பட்ட பீரோவைப்  பார்த்தபோது, அதன் உள்ளே இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த வாசு, சந்திரகுமார் ஆகிய இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

இதுகுறித்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்ததோடு வழக்குப் பதிவும் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; மர்மம் நிறைந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் ஆய்வு

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Tahsildar study at the mysterious Anbu Jyoti Ashram

 

விழுப்புரத்தில் மூடப்பட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி என்ற மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜபருல்லா என்பவர் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

 

விசாரணையின் அடிப்படையில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 142 பேரை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அதில் 109 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், ஒரு குழந்தை. விசாரணையின் அடுத்தடுத்த கட்டமாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. முறையாக அனுமதி பெறாமல் காப்பகம் நடந்து வந்ததும், அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்கிலியில் கட்டிப்போட்டு பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஜூபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடையே நேற்று மாலை அன்பு ஜோதி ஆசிரமம் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Next Story

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளர்களுக்கு ஆணை வழங்கிய எம்.எல்.ஏ.! 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

MLA who issued the order to the beneficiaries of the housing scheme for all!

 

தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் வீடு திட்டத்தைத் துவக்கி அதனை நடைமுறைப் படுத்திவருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி, அத்தொகுதியில் உள்ள 48 பயனாளிகளுக்கு ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆணைகளை வழங்கினார். மேலும், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பையும் பயனாளர்களுக்கு வழங்கினார். 

 

MLA who issued the order to the beneficiaries of the housing scheme for all!

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயசந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய.ரவிதுரை, ஒன்றிய குழு தலைவர் சங்கிதா அரசி ரவிதுரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.