ரக

Advertisment

அரசு ஒப்பந்தம் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், பணத்தைத் திருப்பி கேட்டால் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் காவல்துறையினர் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.