வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சி.எம்.சி. இந்த மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சஞ்சீவ். இவரது வீடு சத்துவாச்சாரியில் உள்ளது. இவர் குடும்பத்தார் டிசம்பர் 1ந்தேதி இரவு வெளியே சென்றுள்ளனர். டிசம்பர் 2ந்தேதி காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ லாக்கரில் வைத்திருந்த நகை, பணம் திருடு போயிருப்பது தெரியவந்து அதிர்ச்சியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக, சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் சஞ்சீவ் தந்த புகாரில், வீட்டில் வைத்திருந்த 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என புகாரில் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.