


Published on 29/12/2021 | Edited on 29/12/2021
இன்று 29.12.2021 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் திறப்பு பணியானது கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் துவங்கப்பட்டது. மேலும் திருவானைக்கோயில் உதவி ஆணையர் செ. மாரியப்பன், ஆய்வாளர் சு.பாஸ்கரன், மேலாளர் ல.உமா மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.