Money fraud in the name of Corporation Commissioner-commissioner's office!

Advertisment

அண்மைக்காலமாகவே பிரபலங்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகள் பெயரில் போலி முகநூல், வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்டு மோசடிகள் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக உள்ள சிம்ரன்ஜீத் சிங் காலோன் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் உதவி ஆணையாளர்களுக்கு தனித்தனியாக மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர காவல்துறை அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ்அப் பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.