/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-velankanni.jpg)
வங்கக் கடலில்மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "மாண்டஸ்" புயலாக உருவாகி தற்போதுவலுவிழந்து நகர்ந்து வரும் வேளையில் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலானகடலோர மாவட்டங்களில் மழைபெய்து வரும் நிலையில் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டுவருகிறது.
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என வந்து செல்வது வழக்கம். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணிஇன்றுபுயல் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டதுடன், அங்குகடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்பட்டது.மேலும், அங்குள்ள கண்காணிப்பு கோபுரங்கள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்து உள்ளன. கடற்கரையோரங்களில் உள்ள50க்கும் மேற்பட்ட கடைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ள கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)