ADVERTISEMENT

மம்மி... மம்மி... என கத்திய வடமாநில தொழிலாளர்கள்: காப்பாற்றிய தமிழர்கள்... பெருங்குடி கட்டிட விபத்து: நேரடி ஃபுல் ரிப்போர்ட்

07:03 AM Jul 22, 2018 | Anonymous (not verified)





கட்டிடம் கட்டப்படுவதற்காக கலக்கப்பட்ட சிமெண்ட் கலவை கூட காயாமல் அப்படியே இருக்கிறது கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் ஒரு ஓரத்தில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. சனிக்கிழமை அவர்களுக்கு சம்பள நாள். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

சென்னை தரமணியில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் எட்டு மாடி தனியார் மருத்துவ மனை கட்டிடம் முடிக்கப்படும் தருவாயில் இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஜெனரேட்டர் வைக்கும் இடம் கட்டப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனை கட்டும் பணி ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது . இந்த நிலையில்தான் எப்போதும் போலவே நேற்று மாலை 7 மணி அளவில் 30க்கும் மேற்பட்டோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் . அப்போது தான் சுவரை எழுப்புவதற்கு கட்டப்பட்டிருந்த சாரம் எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அருகிலுள்ள வீடுகளில் இருந்த மக்கள் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதை அடுத்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் பணி வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ADVERTISEMENT

நமக்கு தகவல் கிடைத்தவுடன் நேரடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்றோம் அந்த மருத்துவமனை பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து இடங்களும் போலீசாரால் தடுப்புகளை கொண்டு யாரும் உள்ளே செல்லாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர் . தேசிய பேரிடர் மீட்பு குழு மாநிலம் பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என 300க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கி மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். போலீஸ் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி என்ன பலரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்திருந்தனர் தென்சென்னை மக்களவை உறுப்பினரான டாக்டர் ஜெயவர்தன் மற்றும் அந்தப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பணியை நேரடியாக கண்காணித்தனர். இந்த மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கொண்டுவரப்பட்டது குறிப்பாக அதிகம் வெளிச்சம் கொண்ட பெரிய லைட்டுகள் கொண்டுவரப்பட்டது . சம்பவம் நடந்த பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் சுற்றி காணப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த போலீசார் சிறிது அளவு சிரமப்பட்டனர். இரவு நேரத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் மீடியாக்களுக்கு அந்த பகுதிவாசிகள் தண்ணீர் கொடுத்து உதவினர். ஒரு கட்டத்தில் மீடியாக்களும் மீட்புப் பணிகளை படம் பிடிக்கக் கூடாது என சிறிது தூரம் தள்ளி நிற்க வைக்கப்பட்டனர் . அதன் பின்னர் தொடர்ந்த மீட்புப் பணியில் இரவு 12 35 மணி அளவில் ஆண் சடலம் ஒன்று இடது கால் இல்லாமல் மீட்புக் குழுவினரால் மீட்க்கப்பட்டது மீட்புக் குழுவினருக்கு இடையூறு இல்லாமல் அருகிலிருந்த அபார்ட்மென்ட்குல் நாமும் சில மீடியாக்களும் கேமராக்களுடன் காத்திருந்தோம் உடலை எடுக்கப்பட்டதை படம் பிடிக்க கூடாது என்பதற்காகவே சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து இருந்த வீடியோ கேமராமேன்கள் மற்றும் போட்டோகிராபர்களை கீழே இறங்கும்படி போலீசார் தொடர்ந்து மிரட்டி வந்தனர். ஆனால் அந்த அப்பார்ட்மெண்டில் மேல் பகுதிக்கு சென்று அனைவரும் உடல் எடுக்கப்படுவதில்லை தொடங்கி ஆம்புலன்சில் ஏற்றப்படுவது வரை பதிவு செய்து கொண்டனர் எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் மீட்புப் பணி தொடர காங்கிரட் கலவைகளும் பெரிய அளவிலான தகர சீட்டுகளும் அதிக கணம் கொண்ட கம்பிகளும் இருந்தது மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. ஆகையால் தொடக்கத்திலிருந்து ஜேசிபி பயன்படுத்தப்பட்டு அவற்றை அப்புறப்படுத்த பட்டன மீட்கப்பட்ட உடலின் கால்கள் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் மீட்கப்பட்டனர் அதன் பின்னர் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டு விபத்து நடந்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்த மருத்துவமனைக்கு அருகில் வசித்து வரும் சிலரிடம் பேசினோம் " இந்த மருத்துவமனையை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டத் தொடங்கப்பட்ட தாகவும் அப்போதிருந்து எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என பலரும் பேசி வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய தினம் இப்படி ஒரு விபத்து நடைபெற்றிருக்கிறது. இந்த மருத்துவமனையின் கீழ் தளம் அமைக்க பெரிய அளவில் குறிகள் தோண்டப்பட்டபோது அருகிலிருந்த பல பெரிய கட்டிடங்களில் பாதிப்புக்குள்ளானது மேலும் சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது . அதன் பின்னர் பலரும் அதுகுறித்து முறையிட்டு இருக்கின்றனர் அப்போது இந்தப் பிரச்சனை வந்த அதே நாளில் எங்கு இருந்து அத்தனை ஆட்கள் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை அவர்களை வைத்து மணல் மூட்டைகளை கொண்டு கீழ்த்தளம் முழுமையாக நிரப்பினார்கள். இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பகுதியில் கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பலர் புதிதாக வீடு கட்டி இருந்தனர். அந்த சமயத்தில் அந்த இடம் மொத்தமாக தேவைப்பட்ட போது விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது ஆகையால் அங்கு புது வீடு கட்டியவர்கள். அனைவரும் வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது அதன் பின்னர் அந்த புதிய வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனை கட்டத் தொடங்கியது முதல் வட மாநிலத்தவர்கள் கொண்டு இது கட்டப்பட்டு வந்திருக்கிறது. மருத்துவமனை கட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் வட மாநிலத்தவர்கள் தங்குவதற்கு பல்வேறு சிறு அளவில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த கட்டிடம் கட்டப்பட்டது தொடங்கியது முதல் இரவு பகலாக வேலைகள் நடைபெற்று வந்திருக்கிறது சாயந்திரம் ஒரு 7 மணி இருக்கும் அப்ப திடீர்னு ஒரு சவுண்டு வந்துச்சு எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வந்து வெளியில் வந்து பார்த்தப்போ அந்தப் பசங்க சிலர் "மம்மி மம்மி மம்மி" கத்திக்கிட்டு வந்தாங்க நல்லா வேலை செஞ்சிட்டு இருந்தவங்க ஏன் இப்படி கத்திட்டு வராங்கன்னு பதறிப்போய் அந்த இடத்தை நோக்கி ஓடினோம் சிலருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துடுச்சு ஒரு சிலருக்கு வந்து கையில அடிபட்டிச்சு அந்த அடிபட்ட நேரத்திலேயே வந்து பெரிய அளவில் வந்து வீங்கிக் கிடந்தது அதுமட்டுமில்லாம இடுப்புல ரெண்டு மூணு பேருக்கு அடிபட்டிச்சு எல்லாருக்கும் முதல்ல தண்ணி கொடுத்தான் அதுக்கப்புறம் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி அனுப்பி வச்சான் வர சொன்னேன். அப்ப ஒருத்தரு காங்கிரட் இருந்து தூக்கி குடுக்குறே வேலை செஞ்சுட்டு இருப்பாரு போல அந்த காங்கிரட் எல்லாம் அவர் மேல கொட்டி கண்ணக்கூட திறக்க முடியாம அப்படியே நடந்து வந்தார் அவர் மேல ஃபுல்லா தண்ணி ஊத்தி சுத்தம் பண்ணி அவர ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வச்சசோம் . யாரும் இதில் சாக கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தோம் ஆனா ஒருத்தர் செத்தது எங்களுக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு என்றார்கள்.


தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு காவல்துறையினர் என கிட்டத்தட்ட ஒரு 300க்கும் மேற்பட்டோர் மாலை எட்டு முப்பது 9 மணி அளவில் இருந்து தொடர்ந்து மீட்பு பணி அதிகாலை 3 மணி வரை எந்தவிதமான நிறுத்தமும் இல்லாமல் இல்லாமல் தொடர்ந்து நடந்தது சரியான திட்டமிடுதல் இல்லாத காரணம் மட்டுமே இந்த விபத்துக்கு காரணம் என்கிறார்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில அதிகாரிகள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT