நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மோகன் நீரிழிவு மையம் குறித்து அவதூறு பதிவு வெளியிட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai high court_6.jpg)
சென்னை கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் மோகன் நீரிழிவு மையத்தில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த துளசி சா என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சையில் திருப்தி இல்லாத காரணத்தால் அந்த சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன் நீரிழிவு மையம் தொடர்ந்த வழக்கில், அந்த மையம் குறித்து துளசி சா பேசுவதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்கள் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக துளசி சா க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், நீதிமன்ற உத்தரவை மீறிய துளசி சா க்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி , வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.
Follow Us