நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

DMK

Advertisment

இந்த நிலையில் மே 30-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோருக்குமோடி அழைப்புவிடுத்திருந்த நிலையில் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலினுக்கு பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்புவிழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.