காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட இருப்பதாக கர்நாடக அரசு கூறி வந்தது. குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக கட்டப்படுகிறது என்று கூறி வந்தது. இந்த நிலையில் தடுப்பணைகளின் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுகரசர் பேசும் போது….

Advertisment

Modi's political game is not to become Zero in 130 - Thirunavukarasar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிரதமரின் அனுமதியோடு இந்த மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாரு, காவிரி பிரச்சினைகள் நீண்ட கால பிரச்சினைகள். நெய்வேலி மின்சாரம் இங்கே உற்பத்தி ஆகிறது ஆகவே வெளிமாநிலத்திற்கு தர மாட்டோம் எனச் சொன்னால் என்னவாகும். மாநில அரசு அணை கட்ட முயல்வதை தடுக்க முடியாதபோது மத்திய அரசு எதற்கு. மத்திய அரசும் தவறுமேயானால் உச்சநீதிமன்றம் இந்த உரிமைகளை காக்கும் பொறுப்பை படிப்படியாக சட்டபூர்வமாக வழங்கியிருக்கிறது அரசியலமைப்புச் சட்டம். யாருடைய அனுமதி இல்லாமல் கர்நாடகா அனுப்பியிருந்தாலும் மத்திய அரசு நிராகரித்திருக்க வேண்டும்.

Advertisment

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3,000 கோடிக்கும், கஜாபுயல் பாதிப்பு நிவாரணத்திற்கு 300 கோடி ஒதுக்குவதும் என்ன நியாயம். மக்கள் ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியது ஜெயலலிதாவுக்குதான் ஆனால் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். மத்திய அரசு இந்த உத்தரவை திரும்ப பெறவில்லை என்றால் பிஜேபிக்கு எந்த ஆதரவும் இல்லை என அறிவியுங்கள். எம்எல்ஏக்களே இல்லாத நிலையில் ஆட்சி நடத்துவது தமிழகத்தில்தான். மோடியின் பி டீம் தமிழக அரசு. ஆந்திரா, தெலுங்கானா, மபி, ராஜஸ்தானில் கண்டிப்பாக காங்கிரஸ் வெற்றி பெறும். 130 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். ஒரு இடம் கூட ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளாவில் பிஜேபி வராது. கர்நாடகத்தை ஓட்டு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துகிறது மோடி அரசு.

130 ல் 0 ஆக இல்லாமல் இருக்க மோடி அரசு இந்த விளையாட்டை நடத்துகிறது. இது தேர்தல் நாடகம். இது இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். எத்தனை மோடி வந்தாலும் மேகதாது அணை கட்ட முடியாது. விட மாட்டோம். மோடி பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப் பட வேண்டும். ராகுல் பிரதமராக, ஸ்டாலின் தமிழக முதல்வராக உறுதியேற்போம்.