(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாபிறந்தநாளான இன்றுஅதிமுக தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள தூணில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்ற தகவலும் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போல அந்த புகை படம் உள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன்கூட்டணி வைத்தது பாஜக போட்டியிடும் நிலையில் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதேபோல் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவை ஜெயலலிதா சந்தித்தபுகைப்படங்கள் அதிமுக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.