Advertisment

எடப்பாடி மோடி சந்திப்பு!! 13 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க கோரிக்கை!!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கஜா புயல்பாதிப்புகளுக்கான நிவாரணத் நிதியை கோரிஉள்ளார்.

Advertisment

தமிழகத்தின் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்கள், வீடுகள் மற்றும் படகுகள், மின்சார கம்பங்கள்போன்றவை சேதமடைந்து பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சாலை மறியல் செய்யும் அளவிற்கு புயலின் பாதிப்பு வளர்ந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அதிகம்பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரண பணிகளை முடுக்கி உள்ளது.

Advertisment

 Modi's meeting with Edappadi 13,000 crore to provide relief fund

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதேபோல் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிப்புபகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதற்கு முன்னரே கஜா புயல் சேதஅறிக்கை தயாரித்த பின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிவாரண நிதி கோரி இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை அறிக்கையுடன் டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் அங்கு அதிமுக எம்பிக்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தியபின் இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புயல் சேதத்திற்கு முதற்கட்ட நிதியாக13 ஆயிரம் கோடி நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும் என கோரியுள்ளார். அதேபோல் புயல் பாதித்த பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு நேரில் ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவசர நிவாரண நிதியாக 1,500 கோடியை வழங்க வேண்டும் என மோடியிடம்கோரிக்கை வைத்துள்ளதார் எடப்பாடி.

Delhi edapadi Meet modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe