நெல்லை தாமிரபரணி மகாபுஷ்கர விழா அக் 11-ல் தொடங்குகிறது. அதற்காக நெல்லை வந்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை குறுக்குத்துறையின் தைப்பூச மண்டப பகுதியில் தூய்மைப் பணியை துவக்கியவர், அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ.க. தொண்டர்களும் வந்திருந்தார்கள். பின்னர் பேசிய தமிழசை,

Advertisment

tamilisai

தாமிரபரணி தீர்த்தவாரி பெருவிழா விருச்சிக ராசியில் நடக்கிறது. விருச்சிகராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாவது சிறப்பு. பிரதமர் மோடியின் ராசி விருச்சகம். எனவே பிரமர் மோடியின் விருச்சிக ராசியில் தீர்த்தவாரி மகா புஷ்கர விழா நடப்பதால் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தைப் பூச மண்டபகப் படியும், குறுக்குத்துறை மண்டபமும் மிக ஆழமானது. சுழல் பகுதி என பல்வேறு காரணங்களைக் கூறி அரசு தடைவிதித்துள்ளது. அனைத்துபடித்துறைகளிலும் தீர்த்தவாரி விழா நடக்கும் என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆகம விதியைச் காட்டி தீர்த்தவாரி யாகம் நடத்த தடைவிதிக்கக் கூடாது. நீண்ட காலமாக சுவாமி, மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்து வருகிறது. இயற்கை சார்ந்த மத உணர்வோடு நடக்கும் பெருவிழாவை வேறு காரணங்களோடு ஒப்பிடக்கூடாது. அரசு தடை செய்யவும் கூடாது. தீர்த்தவாரி பெரு விழாவிற்காக படித்துறைதூய்மையே சேவை என்ற பணி செய்து வருகிறோம். விழாவில் முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

Advertisment

tamilisai

இந்த நிகழ்ச்சியில்பா.ஜ.க. மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் சுப.நாகராஜன் மாநில விவசாய அணி செ.கணேஷ்குமார் ஆதித்தன் மாவட்ட தலைவர், குமரேச சீனிவாசன் போன்றவர்கள் உடனிருந்தனர்.