Advertisment

45 மணி நேர தியானம் ஓவர் - நிறைவு செய்த மோடி!

Modi who over-completed 45 hours of meditation

பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுதுவங்கி நடைபெற்று வருகிறது.இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார். அங்கு பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் பின்னர், சிறப்புப் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார். 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி 30-05-24 அன்று இரவு தொடங்கிய நிலையில், நேற்று 31-05-24 இரண்டாவது நாளாக அவர் தியானத்தை தொடர்ந்தார்.

Advertisment

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இருந்தது. தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக அதிகாலையில் விவேகானந்தர் பாறையைச் சுற்றி நடையிற்சியில் ஈடுபட்டார். கட்டுப்பாடுகளுடன் படகு சேவை தொடங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளும் கட்டுப்பாடுகளுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மூன்றாவது நாள் தியானத்தை பிரதமர் மோடி தொடர்ந்த நிலையில் தற்போது தியானத்தை முடித்துக்கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். இதனால் பிரதமரின்45 மணிநேரதியானம் நிறைவு பெற்றுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது படகு மூலம் திருவள்ளுவர் சிலையை மோடி பார்வையிட்டு வருகிறார்.

Election kanniyakumari modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe