மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்தார். பதவியேற்ற பின் வைகோ, “அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்பும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று சொன்னவுடன் அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.

Advertisment

பின்னர், தனது முதல் கேள்வியை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் எழுப்பினார்.இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisment

v

வாழ்த்துக்கள் வைகோ...

சிறுத்தைபோல் நடந்து சென்றாய்

செம்மொழி உறுதி பூண்டாய்

நிறுத்தவே முடியவில்லை

நீள்விழி வடித்த கண்ணீர்

போர்த்திறம் பழக்கு - விட்டுப்

போகட்டும் வழக்கு - உன்

வார்த்தைகள் முழக்கு - நீ

வடக்கிலே கிழக்கு

v