Advertisment

’மோடிக்கு நாமம் போடுவோம்’ - ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

கெட்டவுட் மோடி என்று சொல்லுவோம்.. என ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Advertisment

e

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் 27.3.19 இரவு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் ஓட்டு கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசியபோது, ‘’தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகாலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நான் ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறேன்.

Advertisment

e

தற்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை பலமாக வீசுகிறது. இதை மக்களே கூறுகிறார்கள். இது தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் ஆதரவலை. மோடி கடந்த தேர்தலின் போது நமது வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக கூறினார். அவர் நமக்கு போடவில்லை. அதனால் நாம் அவருக்கு போடுவோம் நாமம். வருகின்ற தேர்தலில் நாம் மோடிக்கு சொல்வோம் கெட்டவுட். தற்போது தங்களிடம் உள்ள உற்சாகம் வருகின்ற ஏப்ரல் 18 ந்தேதி வரை தொடரவேண்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மோடி நம்மை வைத்து கெடுதல் செய்தார், இப்போது நாம் அவரை வெளியே போங்க என அனுப்பி வைப்போம். மோடியே வெளியே போங்க " . என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

e

தொடர்ந்து ஈரோட்டில் ம.தி.மு.க. வேப்பாளர் கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னதிற்கு வாக்கு சேகரித்தார்.

Election Erode stalin uthayanithi modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe