Advertisment

காமராஜர் இந்த ஆட்சியைத்தான் விரும்பினார்-மோடி உரை!!

ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு விழா மேடைக்கு வந்தடைந்தார்.

Advertisment

திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,

modi

சகோதரர்களே இந்த திருப்பூர் மண்ணுக்குநான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இதுதைரியத்திற்கான மண். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை அவர்களுடைய துணிச்சல் இந்த நாட்டு மக்களுக்கு பெரிய உத்வேகத்தை தந்தது. ''மீண்டும் நமோ'' என்று சொல்கின்ற செய்தியை தாங்கிய டிசர்ட்களும், தொப்பிகளும்இந்த திருப்பூர்மண்ணில்இருந்துதான் உற்பத்தியாகி வந்து கொண்டிருக்கின்றன.

அதிகாரத்தைஇடைத்தரகர்கள் சுற்றி வந்தது தற்போது பாஜக ஆட்சியில்நிறுத்தப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் மீது அக்கறை இல்லாததால்தான் அந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். தற்போதுள்ள ஆட்சியில் ஊழலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆட்சியைதான் காமராஜர் விரும்பினார்.

Advertisment

முந்தைய அரசாங்கம் ஊழல் செய்து வந்தன. தேசிய பாதுகாப்பு துறையின் தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்க பாஜகஅரசு விரும்புகிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்கின்ற 40 ஆண்டு கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றியது. ஆனால் எதிர்க்கட்சிகள்ராணுவத்தை எதிர்த்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களையும் மேம்படுத்தி வருகிறோம். சென்னை உள்பட நாடு முழுவதும் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு சுகாதாரம் உறுதிசெய்யப்படுகிறது.

அனைத்து அறிவும் தமது மூளையில்இருப்பதாகக் கூறும் அமைச்சர் ஒருவர்தமிழகத்தில் இருந்து வந்தார் எனமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என விமர்சித்தார் மோடி.

Speech modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe