style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் நடந்த அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபேசுகையில்,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். தமிழகத்தில் விமான நிலையங்களில் விமானங்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14,000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்களுக்குஎந்தபிரச்சனை எங்கு ஏற்பட்டாலும் மத்திய அரசு உடனடியாக உதவி செய்கிறது.1900 மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சவுதி அரசின் இளவரசொடு பேசி சிறையிலுள்ள 800 பேரை வெளியில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறிய மோடி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரவு விகிதம் 42 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது எனவும்கூறினார்.