Modi shakes hands and welcomes!

Advertisment

இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்துஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தற்பொழுது நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றுகொண்டிருக்கும் மோடியை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். அப்பொழுது காரில் இருந்து கதவை திறந்த மோடி தொண்டர்களின்வரவேற்பைஏற்றுக்கொள்ளும் விதமாக மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில்நடைபெற இருக்கும் விழாவில் 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

முன்னதாக மோடியை சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை தமிழக ஆளுநர் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்க அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை வரவேற்றார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமரை வரவேற்றார். முன்னாள் தமிழக பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் பிரதமரை வரவேற்க காத்திருந்தவர்களை பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.