டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று காலைசென்னை புறப்பட்ட மோடி 10 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்துக்கு சென்றுஅங்கிருந்து விழா நடக்கும் நேரு உள் விளையாட்டரங்கிற்குகாரில்வந்தார். அவருக்கு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நேரு உள் விளையாட்டுஅரங்கு விழா மேடைக்கு வருவதற்குமுன்பாகபிரதமர் மோடிஅர்ஜுன் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். அதன்பிறகு 8000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கநேரு உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரைசால்வை அணிவித்து வரவேற்றார்.அதேபோல் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசாக அளித்தார். துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை வரவேற்கும்விதமாக வரவேற்புரையாற்றினார். அதேபோல்முதல்வரும்வரவேற்புரையாற்றினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி கோவை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அரசு மற்றும் பாஜக விழாவில் கலந்துகொள்ள பிப்ரவரி 25-ஆம் தேதி பிரதமர் கோவை வர உள்ளார். அதேபோல் பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர உள்ளார் எனவும் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/tfutu.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/45475475.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/dyuey.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/esytwet.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/tfuru.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/dfyhy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/000.jpg)