தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு வாரம் ஆன நிலையில் அ.தி.மு.க கூட்டணிக்குள் புகைச்சல் வரத் தொடங்கிவிட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மோடி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தில் பாஜ.க வெற்றி இல்லை என்றாலும் இந்தியாவின் வெற்றியை பா.ஜ.க, இந்து முன்னணியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்தான் புதுக்கோட்டை இந்து முன்னணி பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பதாகை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் மாலை வரை பதாகை இருந்தது. ஆனால் நேற்று இரவு அந்த பதாகை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு காதணி விழாவுக்காக முன்னணி தமிழ் நடிகர் படம் போட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் வீர.வடிவேல் இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ஜாபர் அலி மற்றும் அவரது மகன் முகமது இப்ராகிம் ஆகியோர் தூண்டுதலில் மோடி படம் போட்ட பதாகை அகற்றப்பட்டுள்ளது. ஆகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எஸ்.பி. அந்த புகாரை விசாரிக்க நகர காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். ஜாபர் அலி அ.தி.மு.க சிறுபாண்மை பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பிளவு ஏற்பட்டு வருகிறதோ என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.