தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி பிரதமர் மோடி தான் அம்மா என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரையில் ஒத்தக்கடை விவசாயக் கல்லூரியின் எதிரேயுள்ள மைதானத்தில் நேற்று மாலை பாஜக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,

நான் இன்று சபதம் ஏற்கிறேன், மகளிரின் பங்களிப்பால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியும். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது உறுதி. பாஜகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அம்மா, அம்மா என்று அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா மறைந்து விட்டார். இனி யார் அம்மா என்று கேட்கிறார்கள்?. தமிழகத்திற்கு யார் அம்மா என்று கேட்கிறார்கள்?. அதற்கு நான் சொன்னேன், தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி பிரதமர் மோடி தான் அம்மா!” என்று கூறியுள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">