Advertisment

மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் தேர்தலில் போட்டி! 

இந்தியாவின் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் தேர்தலில் போட்டியிட போவதாகவும், அரசியலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்து அனைத்து சங்க தமிழக விவசாயிகளின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Advertisment

ay

இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுப்பது, அதுவரை கடன் தள்ளுபடி செய்தது, 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தனிநபர் இன்சூரன்ஸ் போராடி பெற்றுத் தருவது என்ற விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை எங்களை சந்தித்து உரிய உதவி செய்வதாக கூறினார்.

Advertisment

ay

ஆனால், இன்று வரை உதவி செய்யவில்லை. மோடி அவர்களை சந்திக்க வாய்ப்பு கேட்டும் கடைசி வரை கொடுக்கவே இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், லாபகரமான விலையை விவசாயிகளின் விளை பொருட்களுக்கும், கடன் தள்ளுபடியும், பென்சன், தனிநபர் இன்சூரன்ஸ் அளிப்பதாக தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாயிகள் 111 பேர், 2 தொகுதியில் போட்டியிட்டால் 222 பேர், 3 தொகுதியில் போட்டியிட்டால் 333 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்வார்கள். ஒரு மாதம் விவசாயி அலைந்து திரிந்து சோறு இல்லாமல் போய், சுயேச்சை வேட்பாளர் இறந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும்.

தமிழகத்தை பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து தேர்தல் வேலை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி M.C. பழனிவேல், மாநில துணைத்தலைவர்கள் கிருஷ்ணகிரி J.P. கிருஷ்ணன், கரூர் கிட்டப்பா ரெட்டி, மாநில பொருளாளர் முசிறி கார்த்திகேயன், மாநில சட்ட ஆலோசகர் S. முத்துகிருஷ்ணன் B.Sc. B.L., மாநில செய்தித்தொடர்பாளர் S. பிரேம்குமார், மாநில செயலார்கள் கபிஸ்தலம் முருகன், நெல்லை ஜாகீர் உஷைன், மாவட்ட தலைவர்கள் சென்னை ஜோதிமுருகன், காஞ்சிபுரம் A.B. சண்முகம், கடலூர் பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம் N. முருகேசன், திருவாரூர் செல்வராஜ், தஞ்சாவூர் குருநாதன், அரியலூர் ஆண்டவர், கிருஷ்ணகிரி சண்முகம், தருமபுரி முனிராஜ், கோயம்புத்தூர் படீஸ்வரன், விருதுநகர் ராஜேந்திரன், திருநெல்வேலி கன்னையா, கள்ளக்குறிச்சி கிருஷ்ணமூர்த்தி, திருச்சி ஜான் மெல்கியோராஜ், மாநில பிரச்சாரகுழு தலைவர் R. செல்லபெருமாள், மாவட்ட செயலார்கள் திருச்சி மரவனூர் செந்தில், S.R. கண்ணன், சேதுரப்பட்டி கண்ணன், கோட்டத்தூர் பெரியசாமி, பழனிசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

ayyakkannu India modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe