fgh

பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் ஏன் ‘கோ பேக் மோடி’ ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொருட்டு நேற்று (14.02.2021) பாரத பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். அவர் தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் இந்தியா முழுவதும் டிரெண்டிங்கில் இருக்கும். அதைப் போல நேற்று அவர் தமிழகம் வந்தபோதும் இந்த ஹேஷ்டேக் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது. மோடிக்கு ஆதரவானவர்களும் ‘வெல்கம் மோடி’ என்று ட்ரெண்ட் செய்தனர். ஆனாலும் நீண்ட நேரம் ‘கோ பேக் மோடி’ வாசகமே ட்ரெண்டிங்கில் இருந்தது.

Advertisment

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு, "ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட தராத தமிழ்நாட்டுக்கு மோடி எவ்வளவோ செய்துள்ளார். ஆனால் எதற்காக அவர் வரும்போது ‘கோ பேக் மோடி’ என டிரெண்டிங் செய்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.