modi

Advertisment

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக கட்டப்பட்ட 404 வீடுகளை பிரதமர் நரேந்திரமோடி ஒப்படைத்தார். இலங்கை மத்தியில் உள்ள நுவரெலியா நகரில் கட்டப்பட்ட 404 வீடுகளையும் டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தமிழர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர். இலங்கையில் நேரடியாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்தார்.

modi

இந்திய அரசு நிதி உதவியின் கீழ் இந்திய வம்சாவளியினருக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதாவது, இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளுக்கு சென்றபோது, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பேசினார். அப்போது, ’’ மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்’’ என அறிவித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பூண்டுலோயா நகரத்தின் டன்சின் தோட்டத்தில் மகாத்மா காந்திபுரம் என்கிற பெயரில் 404 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisment

modi

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட வீடுகளில் இதுவரையிலும் 47,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. நான் கடந்த ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு அறிவித்த மேலும் 10 ஆயிரம் கட்டுவதற்கான உடன்படிக்கையில் இன்று இந்தியாவும் இலங்கையும் கையோப்பமிட்டுள்ளன. இலங்கை தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்’’என்று தெரிவித்தார்.