நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் 9வது மாநில மாநாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சனிக்கிழமையன்று துவங்குகிறது. இதனின் முன் நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மாநாட்டின் பிரதிநிதிகள், "மாநாட்டில் வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வங்கி எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளையும் ஆய்வு செய்து அதனையொட்டிய தீர்மானம் நிறைவேற்றப்படும்." என்றனர்.
தொடர்ந்து பேசிய அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாலசமோ., "80 கோடி பேர் வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் சூழ்நிலையில் இரண்டு லட்சம் இடங்கள் பணியாளர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. அதனை நிரப்ப முயற்சி செய்ய வேண்டும். 2013 ஆம் ஆண்டு வங்கிகளின் வராக்கடன் 1,64,461 கோடிகள் மட்டுமே.! ஆனால் தற்போது 10 லட்சம் கோடிகளுக்கு மேல் வராக்கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த கடன்களில் பெருமளவு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதானி, அம்பாணி, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம், போன்றோர்களுக்கு மட்டுமே வாங்கிய கடனில் 41 ஆயிரம் கோடிகளுக்கு மேல், மத்திய அரசு 80% தள்ளுபடியாக வழங்கி உள்ளது.
இதனால் நாட்டு மக்களுடைய பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களை சுரண்டி கார்பரேட் நிறுவனங்கள் வளர்வதற்கு மட்டுமே மத்திய அரசு உதவி புரிகிறது. இதனை களைய வேண்டும். இல்லையெனில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் எங்களது சங்கம் ஈடுபடும்." என மத்திய அரசை எச்சரித்தார் அவர்.