Advertisment

பிரதமர் மோடி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக!

’ஒரே நாடு; ஒரே தேர்தல்’தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றபோதும் பங்கேற்கவில்லை.

Advertisment

m

கட்சியின் தலைமைக்கு பதில் அதற்கு அடுத்துள்ள நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா? என்பதில் ஏற்பட்ட குழப்பத்தினால் அதிமுகவில் யாரும் பங்கேற்கவில்லை என தகவல்.

Advertisment

ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

காங்கிரஸ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்திருந்த நிலையில், அதிமுக இக்கூட்டத்தை புறக்கணித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe