
44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் விழாவின் தொடக்க நிகழ்வானது இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை அவர் ஆளுநர் மாளிகையில் தங்க இருப்பதாகவும், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதன்படி ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருப்பதால் ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கும் நிலையில் இந்த ஆலோசனையானது நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆலோசனையில் தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow Us