Tiruppur bjp

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் வாஜ்பாய் திடலில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்து பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மேடை அமைக்கும் இடம், ஹெலிப்பேட் அமைப்பு, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (30.01.2019) காலை மேடை அமைக்கும் பணிக்கான பந்தக்கால் நடும் நிகழ்வு, மாநாட்டு திடலில் நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கயிறு வாரியத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பந்தக்கால் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.