Published on 18/12/2021 | Edited on 18/12/2021

வரும் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 11 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்குப் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் திறந்துவைக்கப் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.