Advertisment

ஐந்தாம் முறையாக தமிழகம் வரும் மோடி

Modi is coming to Tamil Nadu for the fifth time

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

Advertisment

இன்று அல்லது நாளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கன்னியாகுமரி வர இருக்கும் பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Election Kanyakumari modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe