Advertisment

'மோடி கடவுளிடமே போய் செட்டில் ஆகிவிடலாம்'- ஆர்.எஸ்.பாரதி பேட்டி

'Modi can go to God and settle down' - RS Bharti interview

தேர்தலில் தோற்கப் போவதை உறுதியாக தெரிந்துகொண்டு போகும் ஒவ்வொரு ஊர்களிலும் மோடி ஒவ்வொரு பொய் சொல்கிறார் எனத்திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''மோடி இப்பொழுது ஒரு கேலிக்கூத்தான மனிதராக ஆகிவிட்டார். பயாலாஜிக்கலாக நான் பிறக்க வில்லை என்று சொல்வதே ஏமாற்றுத்தனம். சயின்டிஃபிக் வளர்ந்த காலத்தில் 22 ஆம் நூற்றாண்டில் போய் இப்படி ஒரு பதிலை ஒரு பிரதமர் சொல்கிறார் என்றால் அவரை எப்படித் தான் விமர்சிப்பது என்று தெரியவில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எதையும் சொல்வது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், பித்தலாட்டம் என்பதை அரசியல் உணர்ந்தவர்கள் நன்றாக அறிந்து கொள்வார்கள்.

Advertisment

இந்தத்தேர்தலில் தோற்கப் போவதை உறுதியாக தெரிந்து கொண்டு அவர் போகும் ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பொய் சொல்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை இருக்க வேண்டிய ஒரு பிரதமர் ஒடிசாவில் போய் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார். அங்கு பாண்டியன் என்ற ஒரு ஆபீசர் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டுக்கு பெயர் தேடி கொடுத்திருக்கிறார். அவரை பார்த்து 'இங்கு ஒரு ஆம்பளை கூட இல்லையா?' என அமித்ஷா பேசுவது தமிழர்களை இழிவு படுத்துவது இல்லையா? அப்படி பார்த்தால் தமிழகத்தில் எத்தனையோ ஜீப் செகரிடீஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கின்ற யாராவது அப்படி பேசி இருப்போமா? நாங்கள் தான் ஒருமைப்பாட்டுக்கு வித்திட்டவர்கள். அது மட்டுமல்ல பூரி ஜெகநாத் சாமி கோவில் சாவியை கொண்டு போய் தமிழ்நாட்டுக்காரர்கள் வைத்துக் கொண்டார்கள் என்பதால் எங்களை திருடன் என்று சொல்வீர்களா? மோடிக்கு சொல்கிறேன் வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகும் பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜியிடம் தான் கஜானா சாவியை கொடுத்துவிட்டு போனார்கள். இந்தியாவிற்கு தந்திரத்தை கொடுத்துவிட்டு பின்னரும் கூட தமிழ்நாட்டுக்காரனை நம்பி தான் வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனான். அப்படிப்பட்ட தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசுகிறார். கடவுளுடைய அவதாரம் நான் என்று முதலில் சொன்னார். இப்பொழுது கடவுள் என்னை அனுப்பினார் என்று சொல்கிறார். அப்படி என்றால் கடவுள் கிட்டயே மோடி போய் செட்டில் ஆகிவிடலாம். இந்திய நாட்டு மக்கள் விடை கொடுக்கப் போகிறார்கள். கடவுளுடன் அவர் ஐக்கியமாகி கடவுள் பணியைத்தீவிரமாக அவர் செய்யட்டும்'' என்றார்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe