நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நாடுமுழுவதும்பிரச்சாரபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று தேனி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுரை வந்தடைந்தார் மோடி. கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து தனி விமானம் மூலம் இரவு 9.50 க்கு மதுரை வந்தடைந்த மோடியை அதிமுக நிர்வாகிகள் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வரவேற்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மோடியை வரவேற்றத்துக்கு பிறகு செய்தியாளகர்ளை சந்தித்த ஓபிஎஸ் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அறிவிக்கப்பட்டநான்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும்என கூறினார்.
அதேவேளையில்நேற்று இரவு மதுரைபசுமலையில் உள்ள சொகுசு தங்கும் ஹோட்டலான தாஜ் ஹோட்டலில் தங்குவதற்காக வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டிய ஏழு தமிழர் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேச இயக்கத்தை சேர்ந்தவர்களான மாரி மற்றும் அந்தோணியைகைது செய்துள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.