Advertisment

ஒபிஎஸ் மகனை ஓரங்கட்டிய மோடி! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!! மகிழ்ச்சியில் அமமுக!!!

நடந்து முடிந்த தேனி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமாரும்,காங்கிரஸ்சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.

Advertisment

இதில் துணை முதல்வரான ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் 75 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை பின்னுக்கு தள்ளி கடும் இழுபறிக்கு இடையே வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக சார்பில் 38 பேர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட்டும் கூட ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை தவிர அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

Advertisment

modi avoid the ops son... supporters are Shocking

இந்த நிலையில் தான் மத்தியில் மோடி அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்ததை கண்டு கூட்டணி கட்சியான அதிமுக மத்தியில் மந்திரி பதவி வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதில் ஒபிஎஸ் எப்படியும் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாக இருந்து வந்தார். அதோடு எடப்பாடியுடன் ஒபிஎஸ் தனது மகன் ரவீந்திர நாத் குமாரையும் டெல்லிக்கு அழைத்து சென்று மோடியை சந்தித்து ஆசி பெற்று வந்தார்.

இந்த நிலையில் கட்சியில் சீனியரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்தியலிங்கமும் மத்திய மந்திரி பதவிக்கு போட்டி போட்டு வருகிறார். இப்படி அதிமுகவில் மத்திய மந்திரி பதவிக்காக பெரும் போராட்டமே நடந்துவந்த வேலையில் ரவீந்திரநாத்க்கு கப்பல் அல்லது ரயில்வே இணை அமைச்சர் பதவி கிடைக்க போகிறது என்ற பேச்சும் அடிபட்டது.

modi avoid the ops son... supporters are Shocking

இந்தநிலையில் தான் தேனியில் உள்ள ரவீந்திரநாத் குமாரின் ஆதரவாளரான 22 வது வார்டு செயலாளரான பொன்ஸ் திடீரென எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் படங்களுடன் கட்சி பொறுப்பாளர்கள் படத்துடன் ரவீந்திரநாத் குமார் படத்தையும் பெரிதாக போட்டு "எங்கள் மத்திய அமைச்சரே'' என பெரிய சைசில் போஸ்டர் அடித்து தேனி நகரத்தில் ஒட்டி இருக்கிறார். அதுபோல் பெரியகுளம், போடி உள்பட மாவட்ட அளவிலும் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும்கப்பல்துறை அமைச்சர் என ஒபிஎஸ் மகனின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.

ஏற்கனவே ரவி எம்.பி.ஆவதற்க்கு முன்பே எம்.பி. ஆகிவிட்டார் என குச்சனூர் காசி அன்னபூரணி கோவில் கல்வெட்டில் வைத்து பிரச்சனையானது அதன் பின் தற்பொழுது ஒபிஎஸ் மகனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று தெரிவதற்கு முன்பே ஒபிஎஸ் மகன் ஆதரவாளர்கள்

போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.

இந்த நிலையில் நேற்று மோடியின் மத்திய அமைச்சர வையில் இடம் பெற போகிறவர்களுக்கு மோடி தனது வீட்டில் தேநீர் விருந்து வைத்தார். அந்த விருந்துக்கு ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமாருக்கும் அழைப்பு வந்ததாக கூறி ரவீந்திரநாத்குமாரும் மத்திய மந்திரி கனவில் உடனடியாக டெல்லிக்குபுறப்பட்டார்.

modi avoid the ops son... supporters are Shocking

அதை கண்டு ரவி ஆதரவாளர்கள் தங்களது அதிமுக இணையத்தில் ரவியை புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அதோடு பிளக்ஸ் பேனர்களை கூட தயார் செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லி சென்ற ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரோ? இணை அமைச்சர் பதவியோ? தராமல் ஒட்டுமொத்தமாக அதிமுகவை மோடி ஓரம் கட்டி விட்டார். இதனால் ரவீந்திர நாத் குமாரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

ஆனால் டிடிவி ஆதரவாளர்களோ ரவிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்காத சந்தோஷத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையதளத்தில் ரவியை கிண்டல் அடித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

minister ops son P Raveendranath Kumar ops modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe