/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-04-12 at 09.47.44.jpeg)
சென்னை திருவிடந்தையில் ராணு கண்காட்சியை திறந்து வைப்பதற்காக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காலை 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-04-12 at 09.57.55.jpeg)
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-04-12 at 09.47.43.jpeg)
கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள மோடியை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
Follow Us