rm

அரசியல் கட்சிகளுக்கு எப்போதும் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் தற்போதும் மோடிக்கும் ரஜிக்கும் சேர்த்து கோமா பூஜை நடத்துவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோமாதா பூஜை நடத்துவது குறித்து பாரதீய வீர விவேகானந்தர் பேரவை நடத்துபவர்களிடம் பேசினோம். அவர்கள், மோடியும் ரஜினியும் ஆன்மீக அரசியல் நடத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு வேறு அரசியல் களத்தில் இருந்தாலும் அவர்களின் எண்ணம் ஒன்றாக தான் இருக்கிறது. ஆகவே தான் மோடி அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு விரைவில் வரவேண்டும் என்றும் இந்த கோமாதா பூஜை நடத்துகிறோம் என்றனர் .

இந்த பூஜைக்கு ஏசி சண்முகம் கட்சியிலிருந்தும் தொண்டர்கள் வருகிறார்கள் என்றனர்.

Advertisment

ரஜினி, பிஜேபியியுடன் இணைந்து தான் அரசியலுக்கு வருவார் என்றும், பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளர் ரஜினி தான் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திருச்சியில் ரஜினிக்கும் மோடிக்கும் இணைத்து கோமாதா பூஜை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.