/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mmo.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கோரோனாவின் ஆபத்தை உணர்ந்து வீடுகளில் சிலர் தனிமைப் படுத்திக்கொண்டு பாதுகாப்பாக உள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரட்டுமனிதர்கள், வரும் ஆபத்தை உணராமல் கட்டுப்பாடுகளை மீறி, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றித் திரிகிறார்கள்.
இந்த நோயைக்கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்,மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்டவர்கள் உலக அளவில் இருந்தும் தற்போதைய கொரோனா உட்பட 50 நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்கிறார்கள்.
மக்களை மிரட்டும் கொரோனா அயல்நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே நம் நாட்டு மக்களுக்கு பரவி வருகிறது. சீனாவில் இந்நோயின் தாக்கம் பிப்ரவரி முதல் தீவிரமாக பரவியது. இந்தியா மட்டும் கடந்த 15ஆம் தேதி தடுப்பு நடவடிக்கைகளில்இறங்கியது. சீனாவில் பரவிய பிப்ரவரி மாத காலகட்டத்திலேயே நமது இந்தியாவிலும் அயல் நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களை மருத்துவமணைகளுக்கு கொண்டு சென்று அப்போதே தனிமைப் படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.
விமானத்தில் வந்தவர்களைப் பெயரளவிற்கு பரிசோதனை செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் அப்படிபட்டவர்களில் கொரோனா தொற்று இருந்து அது தீவிரமாகி அவர்களுடன் இருந்த மற்றவர்களுக்கும் பரவிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக டெங்கு, மலேரியா, பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற பெரிதும் உதவியது சித்தமருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலவேம்பு கசாயம்.
அதேபோல் இப்போதும் சித்தமருத்துவ நிபுனர்கள் கபசுரநீர், வாதசுரநீர் ஆகிய இரண்டு மருந்துகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் எனக் கூறிவருகிறார்கள். இதை பயன்படுத்த முதலில் அரசுகள் தயக்கம் காட்டியது. இப்போது பிரதமர் மோடி, சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கருத்தைக் கேட்டு இதைப் பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை மக்கள்பயன்பாட்டுக்கு ஒரே நேரத்தில் தயாரித்துக்கொடுப்பதில் நடைமுறைசிக்கல்கள் இருக்கின்றன.
மத்திய, மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் இதற்கான மூலப்பொருட்களைத் திரட்டி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாம்கால் மருந்துகம்பெனிகள் மூலம் தயாரித்து வழங்கினால் விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தமருத்துவமனை பிரிவுகளில் இருந்து மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தைத் தற்போதைக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாம். இன்நோயில் இருந்து மக்களைப் பாதுகாக்க தனிமைப்படுத்துவது மிகமிக அவசியம். அதே நேரத்தில் மக்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதற்கான மாற்று மருந்து கண்டுபிடிப்பது அல்லது மாற்றுவழி கண்டறிவது மிகமிக அவசியம் என்பதை மத்தியமாநில அரசுகள் உணரவேண்டும்.
மக்கள் கிராமங்களில் அவர்களே முன்வந்து மாட்டுச் சாணம், மஞ்சள், வேப்பிலை, வசம்பு, போன்ற கிருமி நாசினிகளைக் கரைத்து தெருக்களிலும் வீடுகளிலும் தெளித்துவருகிறார்கள். இதன் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும் அதேநேரத்தில் தனிமனிதர்களும் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் நோய்த்தொற்று இருக்கிறதோ இல்லையோ விலகி இருக்கவேண்டும். கும்பல் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். வெண்ணீர், எலுமிச்சை சாறு, இஞ்சி, கலந்து சாறு குடிக்கலாம். இப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நோய் வராமல் பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார் நெய்வேலி மந்தாரகுப்பத்தைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவர் அரிபாரதி.
மக்கள் ஒவ்வொருவரும் உயிர் பயத்தில் உள்ளனர் என்பதற்கு இதோ ஒரு உதாரணம். விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகில் உள்ளது சிறுணாம்பூண்டி கிராமம். இந்த ஊரில் நேற்று ஆதரவற்ற மனிதர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோய்விட்டார் இவரது உடலை எடுத்து அடக்கம் செய்ய கூட ஊர் மக்கள் முன்வரவில்லை. இதையடுத்து அனந்தபுரம் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சென்று அந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இதே நிலைதான் மற்றக்குடும்பங்களிலும் நடந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் காரணம் கொரோனா நோயில் இறந்திருக்கலாம் நாம் அருகில் சென்றால் நமக்கு அந்த நோய்த் தொற்றிவிடும் என்ற பயத்தில் மக்கள் விலகியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் மத்திய மாநில அரசுகள் கொரோனா நோய் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களும் இந்த நோயினால் மற்றநாடுகளில் நடக்கம் சம்பவங்களை ஊடகங்கள் மூலம் பார்த்தது வருகிறார்கள். அதை உணர்ந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)