பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அடுத்த மாதம் அக்டோபர் 11ல் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திருவிடந்தை கிராமத்தில் உள்ள ஹெலிபேடு சீரமைக்கப்பட்டு வருகிறது.

மோடி, சீன அதிபரின் வருகை தொடர்பாக வெளியுறுவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்னை வந்து அரசின் உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர்.

யுனெஸ்கோ நிறுவனதால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் தங்கவிருக்கும் தாஜ் விடுதி மற்றும் அவர்கள் சுற்றிப்பார்கவிருக்கும் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் சீன அரசின் 30க்கும் மேற்பட்ட உயரதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று அவ்விடங்களில் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.