The modern technique of polishing ration rice and looking for money ... escaped gang .. trapped 8 tons of polished rice !!

Advertisment

அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தமிழக ரேசன்அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது வாடிக்கையான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையே பாலீஷ் செய்து மாடர்ன் ரைஸ் என்ற கெத்தோடு அதிகாரிகளின் சோதனையிலும் தப்பிக்கிற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகத் கிடைத்த தகவலால் அந்த காவல் நிலைய எஸ்.ஐ.யோபு சம்பத்ராஜன் தலைமையிலான போலீஸார் தென்பகுதி ஓரத்திலுள்ள கோவிந்தப்பேரி கண்மாயை ரவுண்டப் செய்ததில், அங்கே 50 கிலோ வீதம் சுமார் 150க்கு மேற்பட்ட சாக்குப் பைகளில் அடைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைத்திருந்ததைக் கைப்பற்றினர். இவர்கள் வருவதையறிந்த கடத்தல் கும்பல் தப்பியோடினர். போலீசார் விசாரணையில் அது பாலீஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி என்றும் கடத்துவதற்கு வசதியாக 50 கிலோ பையில் பேக் செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.

The modern technique of polishing ration rice and looking for money ... escaped gang .. trapped 8 tons of polished rice !!

Advertisment

பொதுவாக ரேஷன் அரிசியைக் கடத்தினால் அதன் நிறமேகாட்டிக் கொடுத்துவிடும். விலையும் குறைவு அதனால் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால், அதனையே மார்க்கெட்டில் விற்கப்படுகிறஅரிசியைப் போன்று அனுப்பினால் தப்பிவிடலாம் என்ற லாப நோக்கில் புதிய டெக்னிக்காக, ரேஷன் அரிசியை நெல் அறவைமில்களின் தனி மெஷின் மூலம் பாலீஷ் செய்வதால் அரிசியின் எடையும் குறைவதுடன் வழக்கமாகச் சந்தையில் கிடக்கும் அரிசியைப் போன்று பளீர் வெள்ளை நிறமாகவும் மாறிவிடும்.

cnc

அதே சமயம், வெளிச் சந்தைகளில் விற்கப்படுகிற அரிசியின் விலையொட்டியே கிடைப்பதால் கணிசமான லாபமும் கிடைக்கும். இந்தக்கணக்கில் சல்லீசான விலையில் வாங்கப்படுகிற ரேஷன் அரிசியைப் பாலீஷ் செய்து மார்க்கெட் ரேட்டிற்குச் சற்று குறைந்த விலையான, கிலோ 25 ரூபாய்க்கு நவீன தயாரிப்பு பைகளில் 50 கிலோ வீதம் பேக் செய்து வாடிக்கையான தனியார் கம்பெனி ரகம் என்று கேரளாவுக்குக் கடத்தி விடுவதால் கொளுத்த லாபம் கிடைப்பதோடு பிடிபடாமல்தப்பியும் விடுகின்றனர். ஆனால் கடுமையான சோதனை இதனைக் காட்டிக் கொடுத்து விடும் அந்த அளவுக்கு அதிகாரிகள் மேற்கொள்ளாதது தான் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisment

இதையடுத்துப் பிடிபட்ட பாலீஷ் ரேஷன் அரிசி மூட்டைகளைக் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு எஸ்.ஐகாசிப்பாடிண்யன் மூலம் நெல்லையிலுள்ள குடோனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர்.