இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் துவங்கி வெயில் வாட்டியெடுத்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள காரணத்தால் கடுமையான வெயில் அடித்துவருகிறது. இந்நிலையில், தற்போது திடீரென அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக சென்னையில் இன்று (12.05.2021) ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.