Advertisment

20 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வலை... சென்னையில் மாடல் ஆணழகன் கைது!

Model male arrested in Chennai!

20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆணழகன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் 26 வயதான முகமது சையத். இவன் மீது மூன்று இளம் பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொண்ட முகமது சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூன்று பெண்களும் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் வேப்பேரி மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் செல்போனிலிருந்து முகமது சையதுக்கு குறுஞ்செய்திகள் பறந்தன. போலீசார் அனுப்பிய குறுஞ்செய்தி என அறியாத முகமது 'ஐ லவ் யூ' என குறுஞ்செய்தி அனுப்பியதோடு மூன்று பேரிடமும் வெவ்வேறு இடங்களில் சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளான். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முகமதுடன் பழகிக்கொண்டிருந்த காலத்தில் மூன்று பெண்களில் ஒரு பெண் எதேச்சையாக முகமதின் மொபைல்போனை எடுத்துப் பார்த்தபோது வாட்ஸப்பில் நிறையப் பெண்களுக்கு காதல் வலை வீசும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்துள்ளார். அதில் இருந்த மற்ற பெண்களின் செல்போன் எண்களை எடுத்து விசாரித்தபோது ஒரே நேரத்தில் பல பெண்களிடம் முகமது காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்திவந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் முதலில் இதனை மறுத்த முகமது சையத் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பதாக கூறி இவ்வாறு பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி கொண்டதை ஒப்புக்கொண்டான். முகமது சையது செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்டெடுக்க சைபர்கிரைமுக்குஅவனது செல்போன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவன் பயன்படுத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Chennai model police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe