Advertisment

செல்ஃபோன் இணைப்பு சரிவர கிடைக்காததால் அல்லாடும் வடலூர் சுற்று வட்டார மக்கள்! 

கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர், மாவட்டத்தின் மையப்பகுதியிலுள்ள ஊர். வள்ளலாரின் அருட்சபை உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய ஊர்.

Advertisment

vadalur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வடலூரை சுற்றியுள்ள ராகவேந்திரா சிட்டி, ஆபத்தானபுரம், சேராக்குப்பம், கன்னியாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாக எந்தவிதமான செல்போன் இணைப்புகளும் சரிவர இயங்குவதில்லை. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகியவற்றிற்கு டவர்கள் இருந்தும் செல்ஃபோன்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி இணைப்பு துண்டாகிறது.

இதனால் வடலூர் பகுதிகளில் விபத்து ஏற்பட்டால்கூட முதலுதவிக்கு 108 ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு இயலவில்லை என்றும், திருட்டு சம்பவம் நடைபெற்றால்கூட காவல்துறையை உதவிக்கு அழைக்க முடியவில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள் அதேசமயம் செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணுவதற்கு மாதத்திற்கு 100 முதல் 500 வரை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், செல்ஃபோன் டவர் சரியாக கிடைக்கிறதா என கண்காணிப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மக்களிடமிருந்து பணத்தை பெறும் நிறுவனங்கள் செல்ஃபோன் இணைப்பு சேவையை முழுமையாக வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

cudalore Mobile network signal vadalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe